தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பார்களா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 130 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளில் 7 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
