தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு... தமிழக அரசு அறிவிப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here

 தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு... தமிழக அரசு அறிவிப்பு!


 தூய தமிழில் பேசினால் ரூ.5,000 பரிசு ...

தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5,000 பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், புதிய சொற்களைக் கண்டறிவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடைமுறை வாழ்க்கையில் கலப்புச் சொற்கள் தவிர்த்து தூய தமிழிலேயே பேசுவோருக்கான பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது அதன்படி நடைமுறை வாழ்க்கையில் பிறமொழிக் கலப்பு இல்லாமல், தூய தமிழிலேயே பேசுவோரில் 3 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ.5,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் sorkuvai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது, நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் இருவரிடையே தமது தமிழ்ப் பற்றை உறுதி செய்து, சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும், சான்றிதழ் தருவோரின் சுயவிவரக் குறிப்பையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அகர முதலித் திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

Post a Comment

0 Comments