TET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி சான்றிதழ் ஆயுட்காலமாக்க கோரிக்கை!

Join Our KalviNews Telegram Group - Click Here
  TET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி  சான்றிதழ் ஆயுட்காலமாக்க கோரிக்கை! 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வணக்கம் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க வேண்டுகிறோம் 

 நாங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகளாக பணிநியமனம்பெறாமல்ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற தொடர் முறைகேடுகளே , எங்கள் பணிவாய்ப்பு பரிபோக மூலக்காரணம். எங்களது நிலையை பலமுறை உங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
 
 ஆசிரியர்தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் மட்டுமே கடந்த ஆறாண்டுகளாக தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் கூட நிரப்பபடவில்லை. மேலும் இருநூறுக்கும் கு றை.வான பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 அதிலும் முறைகேடு நடந்துள்ளது குறித்த வழக்கு மதுர உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே பேராசிரியருக்கான தகுதிதேர்வு SLET , NET சான்றிதழ் காலம் ஆயுட்காலமாக உள்ளது என்பதை நினைவு கூர்கிறோம். எங்களது கோரிக்கைகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழை ஆயுட்காலமாக்க வேண்டும். 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனம் மேற்கொள்ள வேண்டுகிறோம்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

Post a Comment

0 Comments