பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆக.3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள், மையங்கள் முதல் ஆன்லைன் வகுப்புகளுடன் கல்வி அமர்வு தொடங்கும். ஆகஸ்ட் 17 முதல் மாணவர்களுக்கு வளாகம் திறக்க வாய்ப்புள்ளது.
கரோனா தொற்று நிலைமை மற்றும் மத்திய மனித வளமேம்பாட்டு உத்தரவுகளைப் பொறுத்து வளாகத்துக்குள் நுழைவதற்கான முறைகள் மற்றும் ஆகஸ்ட் 17 முதல் வழக்கமான வகுப்புகளைத் தொடங்குவது ஆகியவை சரியான நேரத்தில் மதிப்பிடப்படும். பல்கலைக்கழக இணையதளத்தில் தொடர்ந்து இதுதொடர்பான விவரங்கள் பதிவிடப்படும். இணையதளத்தில் அடுத்தகட்ட தகவலை அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.
