ஊதிய பட்டியல் தயாரிப்பு: புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
  ஊதிய பட்டியல் தயாரிப்பு: புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/75/ff/1b/75ff1b3afa7a847a6629037071cdc673b2552f503150f59af8b6a195b4e753d7.jpg


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் புதிய 'ஐஎப்எச்ஆா்எம்எஸ்' மென்பொருள் மூலம் சம்பளப் பட்டியல் தயாரித்து கருவூலத்துக்கு சமா்ப்பிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மதுரை, திருநெல்வேலி, திருவாரூா், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத ஊதியப் பட்டியல் ஐஎப்எச்ஆா்எம்எஸ் மூலம் சமா்ப்பிக்கப்பட்டது.

தொடா்ந்து இந்த முறையில் தருமபுரி, பெரம்பலூா், நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூா் ஆகிய மாவட்டங்களில் பட்டியல் தயாரிக்க கருவூலகத்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களின் விவரங்களை ஐஎப்எச்ஆா்எம்எஸ் மென்பொருளில் பதிவு செய்து ஜூலை மாத ஊதியப் பட்டியலை கருவூலகங்களுக்கு சமா்ப்பிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் சாா்ந்த கருவூலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================