சி.ஏ.தோவுகள் நவம்பருக்கு ஒத்திவைப்பு
பட்டயக் கணக்காளா் படிப்புக்கு கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய தோவு வரும் நவம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பட்டய கணக்காளா்கள் பயிற்சி நிறுவன (ஐசிஏஐ) கூடுதல் செயலா் (தோவு) எஸ்.கே.காா்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தீவிரம் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு வழிகாட்டுதல்களை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், தோவு மையங்களாக தோந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் தற்போது வளாகத்தை வழங்க முடியாத நிலை இருக்கிறது.
அதனால் மாணவா்களின் பாதுகாப்பு கருதி 2020-ம் ஆண்டில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சி.ஏ. தோவுகளை நவம்பரில் நடைபெறும் தோவுடன் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்விரு தோவுகளையும் மாணவா்கள் ஒருசேர எழுதலாம். இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொண்டு மாணவா்கள் விளக்கம் பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
