ஸூம், கூகுள் மீட்-க்கு போட்டியாக 'ஜியோ மீட்' : - புதிய அதிரடி..!

Join Our KalviNews Telegram Group - Click Here

  ஸூம், கூகுள் மீட்-க்கு போட்டியாக 'ஜியோ மீட்' : - புதிய அதிரடி..!

 ஜியோ நிறுவனம் தங்கள் டிஜிட்டல் துறையில் புதிய முயற்சியாக குரூப் வீடியோ காலிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

கச்சா எண்ணெய் சரிவால் சொத்து மதிப்புகளை இழந்து ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்குச் சென்ற ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி, தனது ஜியோ நிறுவனத்தின் மூலம் மீண்டும் ஆசியாவில் முதல் பணக்காரர் ஆனார்.
அத்துடன் உலகின் பணக்காரர்கள் பட்டியலிலும் 9வது இடத்திற்கு முன்னேறினார். ஜியோவின் பங்குகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளைக் கொடுத்து வாங்கியதே இதற்குக் காரணம்.

அதிலிருந்து ஜியோ நிறுவனத்தின் அடுத்தடுத்த அதிரடிகள் தொடங்கியுள்ளன. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோமார்ட் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ஸூம், கூகுள் மீட் ஆகிய செயலிகளுக்குப் போட்டியாக ஜியோ மீட் எனும் புதிய வீடியோ காலிங் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் அன்லிமிடெட் ஹெச்டி வீடியோ கால்ஸ் பேச முடியும் என்றும், இந்தியாவில் இந்தியர்களுக்காக இது உருவாக்கப்பட்டது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப் ஸ்டோரில் இதைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனப்பட்டுள்ளது..
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================