உலகளவில் 1.11 கோடி பேருக்கு கொரோனா.. அமெரிக்காவில் உச்சம்.. ஒரே நாளில் 54,903 பேர் பாதிப்பு
டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,81,818 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,81,818 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,92,023ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,378ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 1.32 லட்சம் பேர் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,90,588ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 54,903 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
புதிய எண்ணிக்கை தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இந்த தொற்றுநோய் அதிகரித்ததால் இவ்வளவு அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
