10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் கணக்கிடுவதில் தனியார் பள்ளிகள் மோசடி - அரசு முறையாக ஆய்வு செய்ய கோரிக்கை!

Join Our KalviNews Telegram Group - Click Here

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் கணக்கிடுவதில் தனியார் பள்ளிகள் மோசடி - அரசு முறையாக ஆய்வு செய்ய கோரிக்கை!


கொரோன பாதிப்பு எதிரொலியாக நடப்பு கல்வி ஆண்டில் எப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரி திறக்கும் என்பது விடை காண இயலாத வினாவாக மாறிவிட்டது. இந்நிலையில் , தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் முன்பே ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.அதனால் , தேர்வு நடப்பது ஒத்தி வைக்கப்பட்டது
.IMG_20200703_111546

இந்நிலையில் , கடந்த மாதம் 15 ம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதோடு , அதற்கான ஆயத்தப்பணிகளும் தீவிரமாக நடந்தன. தேர்வு மையங்கள் தயார்படுத்துதல் , வினா , விடைத்தாள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தல் , நுழைவுச் சீட்டு மாணவர்க ளுக்கு வழங்குதல் போன்ற பணிகள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் 15 ம் தேதி நடைபெறுவதாக இருந்த 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. மேலும் , மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும் , வருகைப் பதி வேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என அறிவித்தது.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================