சத்துணவை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் லிஸ்ட் தயார் செய்ய உத்தரவு! - தமிழக அரசின் அக்கறை

Join Our KalviNews Telegram Group - Click Here

 சத்துணவை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் லிஸ்ட் தயார் செய்ய உத்தரவு! - தமிழக அரசின் அக்கறை

தமிழகத்தில் சத்துணவு எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் பட்டியலைத் தயார் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவுக்காக பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பிய பெற்றோர் அதிகம். அதனால்தான் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 


இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பெற்றோரும் தொழில்கள் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவை மட்டும் நம்பியிருக்கும் பல மாணவர்கள் போதுமான உணவு இன்றி அவதியுறுவதாக செய்திகள் வெளியாகின. இதனால், மாவட்ட வாரியாக சத்துணவை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை தயார் செய்யும்படி, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த விவரம் கிடைத்ததும், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவை வீட்டிலேயே தயார் செய்ய, பெற்றோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அரசு இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================