கல்விக் கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்கக் கூடாது... தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here

 கல்விக் கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்கக் கூடாது... தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் சங்கங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியுமென நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார். இன்று, இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு, 248 கோடியை 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை மூலம், மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மும்பை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்க அறிவுறுத்தினார்.

தனியார் பள்ளிகளின் இந்த கோரிக்கையை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================