அன்லாக் 2.0: நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என மோடி அறிவிப்பு! முழு விவரம்!

Join Our KalviNews Telegram Group - Click Here

 அன்லாக் 2.0: நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என மோடி அறிவிப்பு! முழு விவரம்!

 பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். கரோனா வைரஸ் அன்லாக் 2.0 பற்றியும் அவர் பேசியுள்ளார். அதன் முழு விவரம் இதோ.
 https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/ab/ca/65/abca6510e55aeead0d277740d18059c29835b191e20779063ecf3e8ea980523a.jpg



பிரதமர் மோடி

இப்போதைய சூழலில் மக்கள் காய்ச்சல், சளி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இனி வருவது மழைக் காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது முடக்கத்தை பல இடங்களில் மக்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் பொது முடக்கம் கொண்டுவரப்பட்டதால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இப்போது செய்யும் சிறு தவறுக்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.

பொது முடக்கத்தின் ஆரம்பகட்டத்தில் மக்கள் அஜாகரதையாக செயல்பட்டதை காண முடிந்தது. நாட்டில் உள்ள ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக் கூடாது. ஏழைகளுக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் பண உதவி நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு மேலும் 5 மாதங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும். இந்த திட்டத்தில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும்.

அரசின் விதிமுறைகளை மீறிவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பிறநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா கரோனாவை நன்றாக எதிர்கொண்டுள்ளது. பொது முடக்கத்தை மீறுவது கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு சமம். ஊரடங்கு விதிமுறைகளுக்கான சட்டத்துக்கு மேல் எந்த நபரும் இல்லை. கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் கரீப் யோஜனா திட்டம் மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதி படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த தொடந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மாஸ்க் அணிவது, 20 நொடிகள் அடிக்கடி கை கழுவுவது, சமூக விலகல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பலனடைவார்கள். வேலைக்காக பிற மாநிலம் செல்லும் தொழிலாளர்களுக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்கும்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================